Tuesday, May 19, 2015

அடுத்த தலைமுறை....!!!???

புது வீட்டுக்கு குடி போயாச்சு... இதுவரைக்கும் எந்த இடத்த பாத்தாலும் ஒரே சந்தோசம்.... ஒரு சின்ன வருத்தம் என்னோட மனதில்....... இப்போ எனக்கும் என்னோட பெற்றோருக்கும் தனி அறைகள்.... இது என்னவோ என்னை அவர்களிடம் இருந்த அந்நிய படுத்துற மாதிரி ஓர் உணர்வை உண்டாகுகிறது.... பழைய வீட்டில் இருந்த மாதிரி ஒரு சுதந்திரம் இங்கு இல்லை.... எப்போவேனாலும் எங்கு வேணாலும் பழைய வீட்டில் சுத்தலாம்.. ஆனா இங்கு என்னோட அறைக்கு வர அப்பாவும் அம்மாவும் அன்னியர் போல கேட்டுகிட்டுவறாங்க... எனக்கும் அங்க போக ஒரு தயக்கம்... கசப்ப இருந்தாலும் இதுதான் உண்மை...

Sunday, July 17, 2011

உதவுங்கள்!!!

விவசாயத்தில் என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் உதவலாம் என்று நினைக்கிறேன், அதற்க்கு இப்போ எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுகிறது

(இயற்கை)விவசாயம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு சம்பந்தமான நல்ல ப்ளாக் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்.....

தமிழில் இருந்தால் இன்னும் சந்தோசம்...

Thursday, June 23, 2011

வீடு கட்டிய/ கட்டும் அனுபவம்.....

என்னோட வாழ்க்கைல நானும் ஏதோ செஞ்ச ஒரு திருப்தி...... புது வீடு கிட்ட தட்ட கட்டியாச்சு....இப்போதான் தெரியுது ஒவ்வொரு புது வீட்டுக்கு பின்னாலும் எவ்வளவு கஷ்ட்டம் இருக்குனு.

எனக்கு தெரிஞ்சு வீடு கட்டுற மக்கள் போடுற கணக்க விட குறைந்தது ஒரு 2 லட்சம் அதிகம் ஆகிடும்னு நினைக்கிறேன். நான் போட்ட கணக்கும் இப்போ ஆகி இருக்கிற கணக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு..... கிட்ட தட்ட டிரௌசெர் கிழிஞ்சு போச்சு......... ஹ்ம்ம்..... வேற எப்படி சொல்றது...........

வீடு கட்ட முதல் மூட்டை சிமெண்ட் வாங்கும் போது அதோட விலை ரூ.180. கான்கிரீட் போட்டதுக்கு அப்புறம் வாங்கும் போது அது கொஞ்சமா விலை ஏறி இருந்துச்சு, சும்மா ரூ.365 தான். அதோட பொறந்தவ சும்மா இருபாள அதாங்க மணல். அதோட பங்குக்கும் ரூ.6000 இருந்து 20,000 வரைக்கும் போயிருச்சு. இதுல என்ன கொடுமைன ரூ.6000-ம் கொடுத்து வாங்கின போது சொன்ன உடனே கிடச்சுது, ஆனா 20,000 -க்கு இருக்கும் போது ஏதோ அவனுக நமக்கு காசும் கொடுத்து, பொருள free -அ கொடுக்கிற மாதிரி ஒரு நல்ல பதிலும் சொல்ல மாட்டங்க, மீறி ஒரு 2 தடவைக்கு மேல போன் பண்ணின அட்டென்ட் பண்ணவும் மாட்டாங்க.
இதே நிலைமை தான் செங்கலுக்கும். அதுவும் ஒரு லோடு ரூ.13000 -இல் இருந்து 25000 வரைக்கும் இருந்துச்சு. இதுவும் முதன் முறைய வாங்கும் போது அட்வான்ஸ் கட்டி வாங்கிக்கலாம். எப்படினா, ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க அட்வான்ஸ் கட்டும் போது என்ன விலையோ அதே விலைக்கு தான் அவர்கள் நமக்கு டெலிவரி செய்வார்கள். ஆனா விலை ஏற ஆரம்பித்த உடனே அட்வான்ஸ் booking கிடையாதுன்னு சொல்லிடாங்க, அதே சமயம் எப்போ லோடு வருதோ அந்த நாள் என்ன விலையோ அதைதான் நாங்க கொடுக்கணும்.


இந்த பிரச்னை மூலமா கிட்டத்தட்ட ஒரு மாசமா வேலைய ஆகல... நாங்களும் காத்திருந்து ரொம்ப சலிச்சு போய் சும்மா இருந்துட்டோம். எல்ல இடத்துலயும் இதே பிரச்சனை, அதுனால கட்டிட ஆளுங்க நிறைய பேரு வேலைக்கு வந்தாங்க வேலையே இல்லாம... ஒரு வழிய மணல், சிமெண்ட் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுது. இதுல ஒரே ஒரு அதிர்ஷ்ட்டம், கட்டிட ஆளுங்க அங்கயே தங்கி வேலை செய்சாங்க. அதுனால வேலை ரொம்ப சீக்கிரம் நடந்துச்சு. கிட்டத்தட்ட 50 சதவீதம் வேலை வரைக்கும் போட்ட பட்ஜெட்ல தான் வேலை & விலைவாசி எல்லாம் இருந்துச்சு.

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது நம்ம பெரியவங்க எல்லாம் சும்மாவா சொல்லி இருப்பாங்க "வீட்ட கட்டி பார், கல்யாணத பண்ணி பாருன்னு " (அந்த காலத்துலயே கோவணம் கிழிஞ்சிருக்கும் போல ஹி ஹி.... ). இதுக்கு இடையல வாஸ்து வாத்தியார் வேற, அத அங்க மாத்து இத இங்க மாத்துன்னு, அப்பா அம்மா சந்தோசத்துக்காக நா ஒன்னும் சொல்லல, ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் வாஸ்த்தா?? பணமா ?? நிலைமை வரும் போது, அவங்களே வாஸ்துவ மறக்க ஆரம்பிச்சுடாங்க....அது தான் எனக்கும் சந்தோசம்...

இங்க எனக்கு ஒரு சந்தேகம்!!!??? கட்டுற வீட்ல வாஸ்து சரி இல்லன்னு சொன்ன கூட பரவால, கட்டுற வீடே வாஸ்து சரி இல்லன்னு சொன்ன எப்படி? நம்ம வசதிக்கு தானே வீடு, அவனுக வசதிக்கு நா என்ன மயி**கு வீடு கட்டணும்.

இதெல்லாம் மீறி வீட்ட பார்க்க வரவங்க கூட தான் செம காமெடியா இருக்கும். அவங்க சொல்ற பிளான் மற்றும் அவங்க கொடுக்கிற ஐடியா.. அப்பப்பா....... நீங்க அவங்களுக்கு சொல்ல வேண்டிய ஒரே ஒரு பதில் "ஆமாம் அப்படி பண்ணி இருக்கலாம்", அவங்களும் ஏதோ நமக்கு (நல்லது) செய்த திருப்தில போய்டுவாங்க. இல்லன அடுத்த பிளான் ரெடி பண்ணி சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.

பாதி வீடு ஆகி இருக்கும் போதே புனியாச்சனை பண்ணிட்டோம் (அட கிரக பிரவேசம்-தாங்க, எங்க ஊருல இப்படி (புனியாச்சனை) தான் சொல்லுவாங்க, ஆனா எதுனால இப்படி ஒரு வார்த்தை வந்ததுன்னு எனக்கு தெரியல, யாராவது நம்ம ஊருகாரங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கப்பா...).

அடுத்தது டைல்ஸ் (Tiles), அந்த ஊருல போய் பாக்கலாம் ,இந்த ஊருல நல்ல இருக்கும்னு சொன்னங்க, கடைசியா வழக்கம் போல நம்ம ஊருலயே எடுதுக்கலாம்னு முடிவு பண்ணி எடுத்துட்டோம், காரணம் ஏதாவது பிரச்சனைனா உடனே மாத்திக்கலாம்னு சவுகரியம்தான். இப்போ கிட்டத்தட்ட 98 சதவீதம் வேலை முடிஞ்சுரிச்சு..... இப்போ தான் ஒரு உண்மையான கஷ்ட்டம் தெரிது.... ஒவ்வொரு பைசாவும் செலவு செய்யும் முன் பத்து தடவ யோசிக்கவேண்டி இருக்கு...... அதுவும் இந்த மாதிரி கடைசி கட்டத்துல காசு மட்டும் செலவு ஆகுது, வேலை முடிகின்ற மாதிரி தெரியல....


என் அப்பா என்கிட்ட கேக்க தயக்கம், எனக்கு அவருகிட்ட கேக்க தயக்கம்....... ஆனா செலவு செஞ்சுதானே ஆகணும்... முக்கால் கிணறு தாண்டியாச்சு இன்னும் கொஞ்சம்.... ஆனா அந்த கொஞ்சம் எவ்வளவு வலிக்குதுன்னு தெரியுது.....
எல்லாத்தையும் விட ஒன்னே ஒன்னு தான் இத செஞ்சு முடிடான்னு சொல்லுது. "உனக்கும் ஒரு புது வீடு இருக்கு என்கிற நினைப்பு". நா அதை உணர்கிறனான்னு தெரியல, ஆனா என் அப்பா முகத்த பார்த்த மட்டும் அது நல்ல தெரியுது.... காலத்துக்கும் நாம கட்டிய வீடுன்னு ஒரு நினைப்பு இருக்கும்ல.......

வாழ்க்கைல இத விட பெருசா சாதித்தவர்கள் எல்லாம் உண்டு... எனக்கு இதுவே ஒரு சாதனை தான்.......

இதோ வந்துட்டேன்..............

ச்ச ரொம்ப நாளா வேலையே இல்லாம இருந்தாலும் ப்ளாக் எழுதவும் வர முடியல... சரி திரும்பவும் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சு இருக்கேன்......
ஹீ... ஹீ....

Wednesday, September 1, 2010

உல்லாச பயணம்

இந்த பதிவ முக்கியமா நான் எழுத காரணம், இந்த சுற்றுலாவில் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் நான் மறக்க கூடாது என்பதற்காக மட்டுமே. கிட்ட தட்ட 7 வருஷத்துக்கும் அப்புறம் நிறைய நண்பர்களை சந்தித்தேன். சில பேரு அப்பன் ஆகுற நிலமைல இருந்தாலும் இன்னும் அப்போ பார்த்த மாதிரியேதான் நடந்து கொண்டார்கள். இதுவே எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் ஆகஸ்ட் 28 மற்றும் 29 -இல் என்னோடு இளநிலை (UG) படித்த நண்பர்களுடன் சுற்றுலா சென்றேன்.இந்த சுற்றுலாவை நாங்க plan பண்ண ஆரம்பிச்சது மே மாதம். ஆனா நண்பர்களோட Work and time constraint பிரச்சனைனால தள்ளி போயிட்டே இருந்து கடைசிய ஆகஸ்ட் 28 மற்றும் 29 Plan பண்ணினோம். சில நண்பர்கள் family ஓட (marriage ஆயிருச்சாம்) வர ஆசை பட்டாங்க. ஆனா நம்ம பசங்க Bachelor life அனுபவிக்கனும்னு சொல்லி கேட்டுகிட்டதுநாள (அதுவும் இல்லாம family majority குறைவா இருந்துச்சு) பசங்க மட்டும் போனோம். இடம் பாண்டிசேரி என முடிவு பண்ணினோம்

நண்பன் G.K.Guru பாண்டிசேரியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தான் (எண்ணா ஒரு பிளான்னிங் - இதுக்குதான் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது). பசங்க சில பேரு சென்னைல இருந்து வந்தாங்க. நானும் சில நண்பர்களும் ஈரோட்ல இருந்து புறப்பட்டோம். ஒரே ஒரு ஜீவன் மட்டும் பெங்களூர்ல இருந்து வந்துச்சு... மொத்தம் 13 பேர் (நாங்க எதிர் பார்த்தது குறைந்த பட்சம் 20).
நண்பன் குரு

நண்பர்களை பற்றி கொஞ்சம்......

நான் பிரபு, மஞ்சு, பாலாஜி மூணு பேரையும் ஈரோட்லியே சந்தித்து விட்டேன். நாங்க இங்க புறப்பட்டதும் அங்க போய் சேர்ந்ததும் அப்படியே தலைகீழ். எப்படினா, பாலாஜி book பண்ணி இருந்த பஸ்தான் முதலில் புறப்பட்டது. அடுத்தது நானும் பிரபுவும். கடைசியா மஞ்சு. ஆனா அங்க போய் சேரும் போது முதலில் மஞ்சுவும், அடுத்தது நாங்களும், கடைசியாக பாலாஜி.பாலாஜி ஊர சுத்தி பார்க்கட்டும் என்கிற நல்ல எண்ணதுல ஜெகதீஷ் அப்படி book பண்ணி கொடுத்து இருப்பான் போல.

எங்களுக்கு முன்னாடி பெங்களூர் ஜீவன் சண்முகம் அங்க ஆஜர் ஆயிருந்தான். கூடவே ஜெகதீஷும். ஜெகதீஷ்தான் Mr.Perfect. எதனாலனா எங்க Get together plan சொன்ன உடனே எதுவுமே கேக்காம Date and place மட்டும் சொல்லு நான் அங்க வரேன் சொன்னான். சொன்ன மாதிரியே date and place details கேட்டுகிட்டு எந்த தொடர்பும் இல்லாம அவனே அங்க வந்துட்டான். அடுத்தது சண்முகம். இவன பத்தி சொல்ல ஒன்னும் இல்ல ஆனா நிறைய இருக்கு. பசங்க இவன மறக்காம இருக்க காரணம் ஒன்னே ஒண்ணுதான். சேது படத்துக்கு இவன் கொடுத்த விளக்கம். அதுவும் அசோக் எங்க சுற்றுலா முடியற வரைக்கும் இதை சொல்லிகிட்டே இருந்தான்.

அடுத்தது நம்ம சென்னை பசங்க. மொத்தம் 6 பேர். ரவி, மாப்பிள்ளை சதீஷ், மொடக்குறிச்சி சதீஷ், அசோக், உமாசங்கர், ரகுபதி.இவங்கதான் வெள்ளிகிழமை இரவு முழுவதும் தூங்கவே இல்ல போல.முதலில் அசோக், இவன பாத்த உடனே எனக்கு தோனினது "எந்த கடைல நீ அரிசி வாங்குற..." பெங்களூர்ல இவன பாக்கும் பொது இருந்தத விட இப்போ 2 மடங்கு இருந்தான். சிம்ப்ளிசிட்டிக்கு இவன் தான் ஒரு சிறந்த உதாரணம். ஏனா, ஐயா வந்தது ஒரே ஒரு pant ஓட தான், அதையும் போட்டுக்கிட்டு தான் வந்தார்.அவ்ளோ simple. அடுத்தது சதீஷ் (மாப்பிள்ளை), அசோக் அகலமா வளர்ந்துகிட்டு போன, இவன் சும்மா நெடு நெடு செம height.பையனுக்கு இன்னும் ஒரு வாரத்துல்ல கல்யாணம். ஒவ்வொரு தடவையும் மத்த பசங்க சாப்பிடுறத பாக்கும் போது சாப்பிட முடியலியேங்கிற வருத்தம் ஒன்னு தான் அவனுக்கு.

அடுத்தது மொடக்குறிச்சி சதீஷ் - ஆளு Silent-ஆ நக்கல் பண்ணுவான். அப்போ இருந்த மாதிரியே தான் இப்போவும். எல்லோரையும் நக்கல் தான், எவனையும் விடல.....ரகுபதி - இவன் ஒருத்தன் தான் உருவத்துல அப்படியே மாறாம இருந்தவன் ("நீயும் எந்த கடைல நீ அரிசி வாங்குற..."). உமாசங்கர் - தரிசனம் (இதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டேன்).

ரவி - காலேஜ் நாட்கள இருந்து இப்போ வரைக்கும் நல்ல நண்பன். ஏழு வருஷமா கூடவே இருக்கான். எந்த விஷயம் இருந்தாலும் 2 பேரும் பேசிக்கொள்வோம். இதுல நான் தொடர்புல இருந்தது ரவியும் சண்முகமும் தான்.

முதல் நாள்....
நாங்க தங்கி இருந்தது பாண்டிசேரி Youth Hostel. காலைல தரிசனம் பண்ணாம எப்படி வெளிய கிளம்பறதுன்னு நினைத்தோம், அதுக்கு தான் உமாசங்கர் இருக்கானேன்னு பசங்க சொல்ல, உடனே கிடச்சுது தரிசனம். கிட்ட தட்ட திகட்ட திகட்ட ச்சே ச்சே கொமட்ட கொமட்ட தரிசனம் இனிதே முடிஞ்சது. அடுத்தது காலை உணவு. ஆப்பமும், தேங்காய் பாலும், கூட சட்டினியும்... அட அட அட....................... soooperoo sooper......


1. Panjavadi Temple ( Sri Anjaneyar Temple) ()

2. Paradise Beach
மட்ட மத்தியானம் போய் இறங்கினோம்...... இருந்தாலும் எங்க தான் இருந்து எல்லோருக்கும் அந்த குஷி வந்ததோ தெரியலை.... ஒரு ஒரு மணி, நேரம் கடற்கரை ஓரம் கால் பந்து (காலால தட்டிட்டு போன அது கால்பந்து தானே?) விளையாண்டோம். கல்லூரி வாழ்க்கைல கூட நாங்க எல்லோரும் இப்படி சேர்ந்து விளையாடியது கிடையாது.... அதுக்கு அப்புறம் பக்கத்துலையே நாங்க வச்சு இருந்த அதே மாதிரி பந்த வச்சு பொண்ணுங்க Volleyball விளையாடிட்டு இருந்தாங்க.... (ஒரே பந்துல இத்தனை விளையாட்ட ஹீ ஹீ.... ) அவங்கல பாத்துட்டு (அவங்க விளையாட்ட இல்ல) கொஞ்சம் rest எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

3. Kailash Beach:
அடுத்து போன ஏரியா Kailash Beach. அது கிட்ட தட்ட ஒரு மீனவ கிராமதுகிட்ட இருந்துச்சு. ஒரு ஆளும் அங்க இல்ல. நாங்க மட்டுமே இருந்ததால செம ஜாலியான குளியல். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வெளிநாட்டு ஜோடி வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி ஏரியா எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்கனு தெரியல......


இரண்டாம் நாள்....

1. பரங்கிப்பேட்டை
Porto Novo அப்படின்னு அப்போ இதுக்கு ஒரு பெயர் இருந்துச்சாம் (உபயம்: நண்பன் குரு).... பெருசா ஒன்னும் இல்லனாலும் இடம் ரொம்ப அமைதியா இருந்துச்சு...

நான் Porto Novo முன்பு
அங்க இருந்து வர வழியில் பாபா (சூப்பர் ஸ்டார் கும்பிடுற சாமி தான்) பிறந்த ஊருக்கு போனோம். கோவில் இருந்துச்சு & பாபா பிறந்த இடம்னு சொல்லி அந்த கோவிலில் ஒரு சதுரமான தொட்டில் வடிவுல கல்லால் ஆனா குழி ஒன்னு இருந்தது. நாங்க போய் இருந்த போது ஒரு புது கல்யாண ஜோடியும் வந்து இருந்தாங்க.... அவங்க கொடுத்த சாதம் & கோவில் பிரசாதம் ரெண்டையும் சாப்பிட்டு கிளம்பினோம்.


2: பிச்சாவரம்:
என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு மறக்க முடியாத இடம். second largest mangrove forest in the world (உபயம்: அதே நண்பன் குரு)....

சதுப்பு நில காட்டுக்குள் போனதே நல்ல அனுபவம். என்ன.... வெயில் தான் கொஞ்சம் அதிகம். சுமார் ஒரு 40 நிமிட விசைப்படகு சவாரிக்கு பிறகு தீவு மாதிரி ஒரு இடத்தில இறங்கினோம்.

அந்த இடம் சுனாமி பாதித்த இடம், அதற்க்கு முன்பு சுமார் 50 குடும்பங்களுக்கு அதிகமாக அங்கே வசித்து வந்தார்களாம். அதில் அனேகம் பேர் சுனாமிக்கு பலி ஆனதாக படகு ஓட்டி வந்தவர் கூறினார். இவருடைய சொந்தங்களும் அதில் அடக்கம். கேக்கவே மனசு கனமாக இருந்தது. அதுவும் சீசன் சமயம் மட்டுமே மீனவ மக்கள் அங்கு வந்து தங்கி விட்டு, சீசன் முடிந்த உடன் திரும்ப ஊருக்குள் போய் விடுவார்களாம். ஆனால் இப்போது அந்த இடம் அரசாங்க வசம்.

அங்கயே மதிய உணவை முடித்தோம். அனைவருக்கும் செம பசி. கொண்டு வந்த பார்சல் மீல்ஸ் அமிர்தம் மாதிரி இருந்துச்சு (உண்மைய சொல்லனும்ன பசி தான் அதுக்கு காரணம்). பசங்க சில பேர் கடற்கரைல குளிசாங்க.. நான், அசோக்கு மற்றும் சதீஷ் மூவரும் தென்ன மரத்து ஓலைய போட்டு படுத்தோம். ரவியும் சண்முகமும் நெடுந்தூரம் நடந்து போய் விட்டு வந்தார்கள்..

ஒரு 3 மணி நேரம் அங்கேயே செலவிட்டோம்...... நல்ல தூக்கம்..... தூங்கிய அரை மணி நேரம் கழித்து சண்முகம் வந்து தூக்கத்தை களைத்தான்.... அதன் பிறகு நான், ரவி, சண்முகம் மூவரும் போய் முத்து எடுத்தோம் (கிளிஞ்ச்சள்கள் பொரிக்கியத்தை வேறு எப்படி சொல்ல..... ). பசங்களும் குளித்து கலைத்து விட்டார்கள்..... அங்கிருந்து உடனே கிளம்பினோம்...

3: சிதம்பரம் நடராஜர் கோவில்:
எங்களுக்கு வந்த guide அவருக்கு ஒரு guide-ஆ இருக்கட்டும்ன்னு சோம பானம் போட்டுக்கிட்டு வந்து இருந்தாரு....ஆனா சும்மா வளைச்சு வளைச்சு சொன்னரு பாருங்க........ எல்லாம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு ஆனா ஒன்னுமே புரியல.....
Sunday night நானும், பிரபுவும் ஈரோடு கிளம்பினோம். மற்ற நண்பர்களும் அவரவர் பதிவு செய்து இருந்த ஊரு கிளம்பி போன்னானுங்க....

நிச்சயமா இது எனக்கு மறக்க முடியாத அனுபவமா இருக்கும்........

Wednesday, March 3, 2010

பிடித்த கவிதைகள்

லேகியம் விற்பன்னர்
வாலிப, வயோதிக அன்பர்களே!
உங்களுக்கு ஆண்மை குறைவா?
ஆம்பிளையா என்ற சந்தேகமா? - நான்
லேகியம் விற்கிறேன்...
என் மனைவி - எனை
நாலு காசு சம்பாதிக்க
துப்பில்லாத - நீயெல்லாம்
ஆம்பிளையா எனக் கேட்டதால்...


கையில் கொஞ்சம் அதிகமாக
பணம் இருந்தாலே !
பக்கத்தில் வருபவர்கள் எல்லோரையும்
திருடனாகத்தான் பார்க்கிறது
மனசு

Friday, January 1, 2010

2009 - என்னுடைய சினிமா

2009-ல என்னுடைய சினிமா அனுபவம்
நா பார்த்த படங்கள் அதுல புடிச்சது புடிகாதது பத்தி சொல்றேன்
நான் கலை ரசிகன் எல்ல கிடையாது... குறிப்பிட்ட மாதிரி படங்கள் மட்டும் தான் பார்பேன் என்பது எல்லாம் கிடையாது.

எனக்கு என்னவோ இந்த வருடம் தமிழ் படங்களை விட
ஆங்கில படங்கள் தான் பட்டைய கெளப்பி இருக்கனு தோணுது.
இந்த வருடம் நா பார்த்த படங்கள் ரொம்ப குறைவே...


1. திருதிரு துருதுரு

பொய் சொல்ல போறோம் படத்துக்கு அப்புறம் ஒரு நல்ல Timing Comedy அதிகம் உள்ள படம். மசாலா படம் பார்ப்பவர்களுக்கு இந்த மாதிரி படம் பிடிப்பது கஷ்டமே . எனக்கு பிடித்திருந்தது.

2. ஆறுமுகம்

ரஜினி மாதிரி ஒரு படமாவது நடிக்கணும்ன்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். இதுல்ல தன்னோட ஆசைய நிறைவேத்திகிட்டார் பரத். அவ்ளதான் ....

3. யாவரும் நலம்:

த்ரில்லர் படம் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா தமிழ அப்படி ஏதாவது படம் வந்தா போய் பாத்து ஏமாந்து விடுவேன். ஆனா இந்த படத்த பொறுத்த வரைக்கும் தமிழில் ஒரு நல்ல த்ரில்லர் படம் என்றே சொல்வேன்.நன்றாக மிரட்டி இருந்தார்கள்

4. ஈரம்
இந்த படமும் என்னை ஏமாற்றவில்லை

5. சிவா மனசுல சக்தி
நல்ல Time Pass படம்.
6. உன்னைப் போல் ஒருவன்
என்னை பொறுத்த வரை கமல் படம்னா ஹீரோ இருக்க மாட்டாங்க அவரையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்.அந்த வகையில் என்னை கேட்டல் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த கமல் படம்.

7. நாடோடிகள்
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒன்னே ஒன்னு சசிகுமார் ஆடுவதை மட்டும் தவிர்த்து விடலாம். இந்த ஆண்டு எனக்கு மிகவும் பிடித்த "ஆடுங்கட ..." பாடல் இடம் பெற்ற படமும் கூட.

8. அயன்
நல்ல பொழுது போக்கு படம்

9. பசங்க
உண்மைய சொல்லனும்னா படம் பிடிச்சது, அதிலும் அவங்க காதல் ரொம்ப புடிச்சது. ஒரு மென்மையான காதல்.
10. வெண்ணிலா கபடிக் குழு:
இந்த ஆண்டு ரொம்பவும் ரசிச்ச படம். ஒரு நல்ல இயக்குனர் கிடைத்திருக்கிறார்

11. கந்தசாமி
பாக்கணும்ன்னு பாத்த படம்