Wednesday, September 1, 2010

உல்லாச பயணம்

இந்த பதிவ முக்கியமா நான் எழுத காரணம், இந்த சுற்றுலாவில் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் நான் மறக்க கூடாது என்பதற்காக மட்டுமே. கிட்ட தட்ட 7 வருஷத்துக்கும் அப்புறம் நிறைய நண்பர்களை சந்தித்தேன். சில பேரு அப்பன் ஆகுற நிலமைல இருந்தாலும் இன்னும் அப்போ பார்த்த மாதிரியேதான் நடந்து கொண்டார்கள். இதுவே எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் ஆகஸ்ட் 28 மற்றும் 29 -இல் என்னோடு இளநிலை (UG) படித்த நண்பர்களுடன் சுற்றுலா சென்றேன்.இந்த சுற்றுலாவை நாங்க plan பண்ண ஆரம்பிச்சது மே மாதம். ஆனா நண்பர்களோட Work and time constraint பிரச்சனைனால தள்ளி போயிட்டே இருந்து கடைசிய ஆகஸ்ட் 28 மற்றும் 29 Plan பண்ணினோம். சில நண்பர்கள் family ஓட (marriage ஆயிருச்சாம்) வர ஆசை பட்டாங்க. ஆனா நம்ம பசங்க Bachelor life அனுபவிக்கனும்னு சொல்லி கேட்டுகிட்டதுநாள (அதுவும் இல்லாம family majority குறைவா இருந்துச்சு) பசங்க மட்டும் போனோம். இடம் பாண்டிசேரி என முடிவு பண்ணினோம்

நண்பன் G.K.Guru பாண்டிசேரியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தான் (எண்ணா ஒரு பிளான்னிங் - இதுக்குதான் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது). பசங்க சில பேரு சென்னைல இருந்து வந்தாங்க. நானும் சில நண்பர்களும் ஈரோட்ல இருந்து புறப்பட்டோம். ஒரே ஒரு ஜீவன் மட்டும் பெங்களூர்ல இருந்து வந்துச்சு... மொத்தம் 13 பேர் (நாங்க எதிர் பார்த்தது குறைந்த பட்சம் 20).
நண்பன் குரு

நண்பர்களை பற்றி கொஞ்சம்......

நான் பிரபு, மஞ்சு, பாலாஜி மூணு பேரையும் ஈரோட்லியே சந்தித்து விட்டேன். நாங்க இங்க புறப்பட்டதும் அங்க போய் சேர்ந்ததும் அப்படியே தலைகீழ். எப்படினா, பாலாஜி book பண்ணி இருந்த பஸ்தான் முதலில் புறப்பட்டது. அடுத்தது நானும் பிரபுவும். கடைசியா மஞ்சு. ஆனா அங்க போய் சேரும் போது முதலில் மஞ்சுவும், அடுத்தது நாங்களும், கடைசியாக பாலாஜி.பாலாஜி ஊர சுத்தி பார்க்கட்டும் என்கிற நல்ல எண்ணதுல ஜெகதீஷ் அப்படி book பண்ணி கொடுத்து இருப்பான் போல.

எங்களுக்கு முன்னாடி பெங்களூர் ஜீவன் சண்முகம் அங்க ஆஜர் ஆயிருந்தான். கூடவே ஜெகதீஷும். ஜெகதீஷ்தான் Mr.Perfect. எதனாலனா எங்க Get together plan சொன்ன உடனே எதுவுமே கேக்காம Date and place மட்டும் சொல்லு நான் அங்க வரேன் சொன்னான். சொன்ன மாதிரியே date and place details கேட்டுகிட்டு எந்த தொடர்பும் இல்லாம அவனே அங்க வந்துட்டான். அடுத்தது சண்முகம். இவன பத்தி சொல்ல ஒன்னும் இல்ல ஆனா நிறைய இருக்கு. பசங்க இவன மறக்காம இருக்க காரணம் ஒன்னே ஒண்ணுதான். சேது படத்துக்கு இவன் கொடுத்த விளக்கம். அதுவும் அசோக் எங்க சுற்றுலா முடியற வரைக்கும் இதை சொல்லிகிட்டே இருந்தான்.

அடுத்தது நம்ம சென்னை பசங்க. மொத்தம் 6 பேர். ரவி, மாப்பிள்ளை சதீஷ், மொடக்குறிச்சி சதீஷ், அசோக், உமாசங்கர், ரகுபதி.இவங்கதான் வெள்ளிகிழமை இரவு முழுவதும் தூங்கவே இல்ல போல.முதலில் அசோக், இவன பாத்த உடனே எனக்கு தோனினது "எந்த கடைல நீ அரிசி வாங்குற..." பெங்களூர்ல இவன பாக்கும் பொது இருந்தத விட இப்போ 2 மடங்கு இருந்தான். சிம்ப்ளிசிட்டிக்கு இவன் தான் ஒரு சிறந்த உதாரணம். ஏனா, ஐயா வந்தது ஒரே ஒரு pant ஓட தான், அதையும் போட்டுக்கிட்டு தான் வந்தார்.அவ்ளோ simple. அடுத்தது சதீஷ் (மாப்பிள்ளை), அசோக் அகலமா வளர்ந்துகிட்டு போன, இவன் சும்மா நெடு நெடு செம height.பையனுக்கு இன்னும் ஒரு வாரத்துல்ல கல்யாணம். ஒவ்வொரு தடவையும் மத்த பசங்க சாப்பிடுறத பாக்கும் போது சாப்பிட முடியலியேங்கிற வருத்தம் ஒன்னு தான் அவனுக்கு.

அடுத்தது மொடக்குறிச்சி சதீஷ் - ஆளு Silent-ஆ நக்கல் பண்ணுவான். அப்போ இருந்த மாதிரியே தான் இப்போவும். எல்லோரையும் நக்கல் தான், எவனையும் விடல.....ரகுபதி - இவன் ஒருத்தன் தான் உருவத்துல அப்படியே மாறாம இருந்தவன் ("நீயும் எந்த கடைல நீ அரிசி வாங்குற..."). உமாசங்கர் - தரிசனம் (இதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டேன்).

ரவி - காலேஜ் நாட்கள இருந்து இப்போ வரைக்கும் நல்ல நண்பன். ஏழு வருஷமா கூடவே இருக்கான். எந்த விஷயம் இருந்தாலும் 2 பேரும் பேசிக்கொள்வோம். இதுல நான் தொடர்புல இருந்தது ரவியும் சண்முகமும் தான்.

முதல் நாள்....
நாங்க தங்கி இருந்தது பாண்டிசேரி Youth Hostel. காலைல தரிசனம் பண்ணாம எப்படி வெளிய கிளம்பறதுன்னு நினைத்தோம், அதுக்கு தான் உமாசங்கர் இருக்கானேன்னு பசங்க சொல்ல, உடனே கிடச்சுது தரிசனம். கிட்ட தட்ட திகட்ட திகட்ட ச்சே ச்சே கொமட்ட கொமட்ட தரிசனம் இனிதே முடிஞ்சது. அடுத்தது காலை உணவு. ஆப்பமும், தேங்காய் பாலும், கூட சட்டினியும்... அட அட அட....................... soooperoo sooper......


1. Panjavadi Temple ( Sri Anjaneyar Temple) ()

2. Paradise Beach
மட்ட மத்தியானம் போய் இறங்கினோம்...... இருந்தாலும் எங்க தான் இருந்து எல்லோருக்கும் அந்த குஷி வந்ததோ தெரியலை.... ஒரு ஒரு மணி, நேரம் கடற்கரை ஓரம் கால் பந்து (காலால தட்டிட்டு போன அது கால்பந்து தானே?) விளையாண்டோம். கல்லூரி வாழ்க்கைல கூட நாங்க எல்லோரும் இப்படி சேர்ந்து விளையாடியது கிடையாது.... அதுக்கு அப்புறம் பக்கத்துலையே நாங்க வச்சு இருந்த அதே மாதிரி பந்த வச்சு பொண்ணுங்க Volleyball விளையாடிட்டு இருந்தாங்க.... (ஒரே பந்துல இத்தனை விளையாட்ட ஹீ ஹீ.... ) அவங்கல பாத்துட்டு (அவங்க விளையாட்ட இல்ல) கொஞ்சம் rest எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

3. Kailash Beach:
அடுத்து போன ஏரியா Kailash Beach. அது கிட்ட தட்ட ஒரு மீனவ கிராமதுகிட்ட இருந்துச்சு. ஒரு ஆளும் அங்க இல்ல. நாங்க மட்டுமே இருந்ததால செம ஜாலியான குளியல். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வெளிநாட்டு ஜோடி வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி ஏரியா எப்படி தான் கண்டு பிடிக்கிறாங்கனு தெரியல......


இரண்டாம் நாள்....

1. பரங்கிப்பேட்டை
Porto Novo அப்படின்னு அப்போ இதுக்கு ஒரு பெயர் இருந்துச்சாம் (உபயம்: நண்பன் குரு).... பெருசா ஒன்னும் இல்லனாலும் இடம் ரொம்ப அமைதியா இருந்துச்சு...

நான் Porto Novo முன்பு
அங்க இருந்து வர வழியில் பாபா (சூப்பர் ஸ்டார் கும்பிடுற சாமி தான்) பிறந்த ஊருக்கு போனோம். கோவில் இருந்துச்சு & பாபா பிறந்த இடம்னு சொல்லி அந்த கோவிலில் ஒரு சதுரமான தொட்டில் வடிவுல கல்லால் ஆனா குழி ஒன்னு இருந்தது. நாங்க போய் இருந்த போது ஒரு புது கல்யாண ஜோடியும் வந்து இருந்தாங்க.... அவங்க கொடுத்த சாதம் & கோவில் பிரசாதம் ரெண்டையும் சாப்பிட்டு கிளம்பினோம்.


2: பிச்சாவரம்:
என்ன பொறுத்த வரைக்கும் இது ஒரு மறக்க முடியாத இடம். second largest mangrove forest in the world (உபயம்: அதே நண்பன் குரு)....

சதுப்பு நில காட்டுக்குள் போனதே நல்ல அனுபவம். என்ன.... வெயில் தான் கொஞ்சம் அதிகம். சுமார் ஒரு 40 நிமிட விசைப்படகு சவாரிக்கு பிறகு தீவு மாதிரி ஒரு இடத்தில இறங்கினோம்.

அந்த இடம் சுனாமி பாதித்த இடம், அதற்க்கு முன்பு சுமார் 50 குடும்பங்களுக்கு அதிகமாக அங்கே வசித்து வந்தார்களாம். அதில் அனேகம் பேர் சுனாமிக்கு பலி ஆனதாக படகு ஓட்டி வந்தவர் கூறினார். இவருடைய சொந்தங்களும் அதில் அடக்கம். கேக்கவே மனசு கனமாக இருந்தது. அதுவும் சீசன் சமயம் மட்டுமே மீனவ மக்கள் அங்கு வந்து தங்கி விட்டு, சீசன் முடிந்த உடன் திரும்ப ஊருக்குள் போய் விடுவார்களாம். ஆனால் இப்போது அந்த இடம் அரசாங்க வசம்.

அங்கயே மதிய உணவை முடித்தோம். அனைவருக்கும் செம பசி. கொண்டு வந்த பார்சல் மீல்ஸ் அமிர்தம் மாதிரி இருந்துச்சு (உண்மைய சொல்லனும்ன பசி தான் அதுக்கு காரணம்). பசங்க சில பேர் கடற்கரைல குளிசாங்க.. நான், அசோக்கு மற்றும் சதீஷ் மூவரும் தென்ன மரத்து ஓலைய போட்டு படுத்தோம். ரவியும் சண்முகமும் நெடுந்தூரம் நடந்து போய் விட்டு வந்தார்கள்..

ஒரு 3 மணி நேரம் அங்கேயே செலவிட்டோம்...... நல்ல தூக்கம்..... தூங்கிய அரை மணி நேரம் கழித்து சண்முகம் வந்து தூக்கத்தை களைத்தான்.... அதன் பிறகு நான், ரவி, சண்முகம் மூவரும் போய் முத்து எடுத்தோம் (கிளிஞ்ச்சள்கள் பொரிக்கியத்தை வேறு எப்படி சொல்ல..... ). பசங்களும் குளித்து கலைத்து விட்டார்கள்..... அங்கிருந்து உடனே கிளம்பினோம்...

3: சிதம்பரம் நடராஜர் கோவில்:
எங்களுக்கு வந்த guide அவருக்கு ஒரு guide-ஆ இருக்கட்டும்ன்னு சோம பானம் போட்டுக்கிட்டு வந்து இருந்தாரு....ஆனா சும்மா வளைச்சு வளைச்சு சொன்னரு பாருங்க........ எல்லாம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு ஆனா ஒன்னுமே புரியல.....
Sunday night நானும், பிரபுவும் ஈரோடு கிளம்பினோம். மற்ற நண்பர்களும் அவரவர் பதிவு செய்து இருந்த ஊரு கிளம்பி போன்னானுங்க....

நிச்சயமா இது எனக்கு மறக்க முடியாத அனுபவமா இருக்கும்........