Thursday, June 23, 2011

வீடு கட்டிய/ கட்டும் அனுபவம்.....

என்னோட வாழ்க்கைல நானும் ஏதோ செஞ்ச ஒரு திருப்தி...... புது வீடு கிட்ட தட்ட கட்டியாச்சு....இப்போதான் தெரியுது ஒவ்வொரு புது வீட்டுக்கு பின்னாலும் எவ்வளவு கஷ்ட்டம் இருக்குனு.

எனக்கு தெரிஞ்சு வீடு கட்டுற மக்கள் போடுற கணக்க விட குறைந்தது ஒரு 2 லட்சம் அதிகம் ஆகிடும்னு நினைக்கிறேன். நான் போட்ட கணக்கும் இப்போ ஆகி இருக்கிற கணக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கு..... கிட்ட தட்ட டிரௌசெர் கிழிஞ்சு போச்சு......... ஹ்ம்ம்..... வேற எப்படி சொல்றது...........

வீடு கட்ட முதல் மூட்டை சிமெண்ட் வாங்கும் போது அதோட விலை ரூ.180. கான்கிரீட் போட்டதுக்கு அப்புறம் வாங்கும் போது அது கொஞ்சமா விலை ஏறி இருந்துச்சு, சும்மா ரூ.365 தான். அதோட பொறந்தவ சும்மா இருபாள அதாங்க மணல். அதோட பங்குக்கும் ரூ.6000 இருந்து 20,000 வரைக்கும் போயிருச்சு. இதுல என்ன கொடுமைன ரூ.6000-ம் கொடுத்து வாங்கின போது சொன்ன உடனே கிடச்சுது, ஆனா 20,000 -க்கு இருக்கும் போது ஏதோ அவனுக நமக்கு காசும் கொடுத்து, பொருள free -அ கொடுக்கிற மாதிரி ஒரு நல்ல பதிலும் சொல்ல மாட்டங்க, மீறி ஒரு 2 தடவைக்கு மேல போன் பண்ணின அட்டென்ட் பண்ணவும் மாட்டாங்க.
இதே நிலைமை தான் செங்கலுக்கும். அதுவும் ஒரு லோடு ரூ.13000 -இல் இருந்து 25000 வரைக்கும் இருந்துச்சு. இதுவும் முதன் முறைய வாங்கும் போது அட்வான்ஸ் கட்டி வாங்கிக்கலாம். எப்படினா, ஒரு வாரத்துக்கு முன்னாடி நீங்க அட்வான்ஸ் கட்டும் போது என்ன விலையோ அதே விலைக்கு தான் அவர்கள் நமக்கு டெலிவரி செய்வார்கள். ஆனா விலை ஏற ஆரம்பித்த உடனே அட்வான்ஸ் booking கிடையாதுன்னு சொல்லிடாங்க, அதே சமயம் எப்போ லோடு வருதோ அந்த நாள் என்ன விலையோ அதைதான் நாங்க கொடுக்கணும்.


இந்த பிரச்னை மூலமா கிட்டத்தட்ட ஒரு மாசமா வேலைய ஆகல... நாங்களும் காத்திருந்து ரொம்ப சலிச்சு போய் சும்மா இருந்துட்டோம். எல்ல இடத்துலயும் இதே பிரச்சனை, அதுனால கட்டிட ஆளுங்க நிறைய பேரு வேலைக்கு வந்தாங்க வேலையே இல்லாம... ஒரு வழிய மணல், சிமெண்ட் எல்லாம் கிடைக்க ஆரம்பிச்சுது. இதுல ஒரே ஒரு அதிர்ஷ்ட்டம், கட்டிட ஆளுங்க அங்கயே தங்கி வேலை செய்சாங்க. அதுனால வேலை ரொம்ப சீக்கிரம் நடந்துச்சு. கிட்டத்தட்ட 50 சதவீதம் வேலை வரைக்கும் போட்ட பட்ஜெட்ல தான் வேலை & விலைவாசி எல்லாம் இருந்துச்சு.

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது நம்ம பெரியவங்க எல்லாம் சும்மாவா சொல்லி இருப்பாங்க "வீட்ட கட்டி பார், கல்யாணத பண்ணி பாருன்னு " (அந்த காலத்துலயே கோவணம் கிழிஞ்சிருக்கும் போல ஹி ஹி.... ). இதுக்கு இடையல வாஸ்து வாத்தியார் வேற, அத அங்க மாத்து இத இங்க மாத்துன்னு, அப்பா அம்மா சந்தோசத்துக்காக நா ஒன்னும் சொல்லல, ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் வாஸ்த்தா?? பணமா ?? நிலைமை வரும் போது, அவங்களே வாஸ்துவ மறக்க ஆரம்பிச்சுடாங்க....அது தான் எனக்கும் சந்தோசம்...

இங்க எனக்கு ஒரு சந்தேகம்!!!??? கட்டுற வீட்ல வாஸ்து சரி இல்லன்னு சொன்ன கூட பரவால, கட்டுற வீடே வாஸ்து சரி இல்லன்னு சொன்ன எப்படி? நம்ம வசதிக்கு தானே வீடு, அவனுக வசதிக்கு நா என்ன மயி**கு வீடு கட்டணும்.

இதெல்லாம் மீறி வீட்ட பார்க்க வரவங்க கூட தான் செம காமெடியா இருக்கும். அவங்க சொல்ற பிளான் மற்றும் அவங்க கொடுக்கிற ஐடியா.. அப்பப்பா....... நீங்க அவங்களுக்கு சொல்ல வேண்டிய ஒரே ஒரு பதில் "ஆமாம் அப்படி பண்ணி இருக்கலாம்", அவங்களும் ஏதோ நமக்கு (நல்லது) செய்த திருப்தில போய்டுவாங்க. இல்லன அடுத்த பிளான் ரெடி பண்ணி சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.

பாதி வீடு ஆகி இருக்கும் போதே புனியாச்சனை பண்ணிட்டோம் (அட கிரக பிரவேசம்-தாங்க, எங்க ஊருல இப்படி (புனியாச்சனை) தான் சொல்லுவாங்க, ஆனா எதுனால இப்படி ஒரு வார்த்தை வந்ததுன்னு எனக்கு தெரியல, யாராவது நம்ம ஊருகாரங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கப்பா...).

அடுத்தது டைல்ஸ் (Tiles), அந்த ஊருல போய் பாக்கலாம் ,இந்த ஊருல நல்ல இருக்கும்னு சொன்னங்க, கடைசியா வழக்கம் போல நம்ம ஊருலயே எடுதுக்கலாம்னு முடிவு பண்ணி எடுத்துட்டோம், காரணம் ஏதாவது பிரச்சனைனா உடனே மாத்திக்கலாம்னு சவுகரியம்தான். இப்போ கிட்டத்தட்ட 98 சதவீதம் வேலை முடிஞ்சுரிச்சு..... இப்போ தான் ஒரு உண்மையான கஷ்ட்டம் தெரிது.... ஒவ்வொரு பைசாவும் செலவு செய்யும் முன் பத்து தடவ யோசிக்கவேண்டி இருக்கு...... அதுவும் இந்த மாதிரி கடைசி கட்டத்துல காசு மட்டும் செலவு ஆகுது, வேலை முடிகின்ற மாதிரி தெரியல....


என் அப்பா என்கிட்ட கேக்க தயக்கம், எனக்கு அவருகிட்ட கேக்க தயக்கம்....... ஆனா செலவு செஞ்சுதானே ஆகணும்... முக்கால் கிணறு தாண்டியாச்சு இன்னும் கொஞ்சம்.... ஆனா அந்த கொஞ்சம் எவ்வளவு வலிக்குதுன்னு தெரியுது.....
எல்லாத்தையும் விட ஒன்னே ஒன்னு தான் இத செஞ்சு முடிடான்னு சொல்லுது. "உனக்கும் ஒரு புது வீடு இருக்கு என்கிற நினைப்பு". நா அதை உணர்கிறனான்னு தெரியல, ஆனா என் அப்பா முகத்த பார்த்த மட்டும் அது நல்ல தெரியுது.... காலத்துக்கும் நாம கட்டிய வீடுன்னு ஒரு நினைப்பு இருக்கும்ல.......

வாழ்க்கைல இத விட பெருசா சாதித்தவர்கள் எல்லாம் உண்டு... எனக்கு இதுவே ஒரு சாதனை தான்.......

இதோ வந்துட்டேன்..............

ச்ச ரொம்ப நாளா வேலையே இல்லாம இருந்தாலும் ப்ளாக் எழுதவும் வர முடியல... சரி திரும்பவும் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சு இருக்கேன்......
ஹீ... ஹீ....